Perambalur: DMK Deputy General Secretary A.Irasa MP met and congratulated DMK Executives!

பெரம்பலூர் மாவட்ட தி.மு.க.அலுவலகத்தில், அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளருமான ஆ.ராசா.எம்.பி. யை, தே.மு.தி.க. பெரம்பலூர் மாவட்ட செயலாளர் துரை.சிவா ஐயப்பன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் , குன்னம் 2 சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றிக்காக தேர்தலில் பாடுபடுவோம் என்றும் தே.மு.தி.க.வினர் தெரிவித்தனர்.
அப்போத, மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பா.துரைசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மு.அட்சயகோபால், வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் து. ஆதவன் மற்றும் தே.மு.தி.க. நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497