Perambalur: DMK Deputy General Secretary A. Raja MP congratulates new Sports Development Team administrators!
பெரம்பலூர் மாவட்டம் தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணிக்கு புதிதாக நிர்வாகிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதலோடு விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில செயலாளர் தயாநிதி மாறன் எம்.பி. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒன்றிய, பேரூர், நகர பகுதிகளில் புதிதாக விளையாட்டு மேம்பாட்டு அணி நிர்வாகிகளை அறிவித்தார். புதிதாக நியமினம் செய்யப்பட்டுள்ள நிர்வாகிகள் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் களத்தூர் கார்மேகம் தலைமையில், பெரம்பலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில், திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி.,யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது, மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன், எம்.எல்.ஏ பிரபாகரன், மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் பரமேஷ்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் பாஸ்கர், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர்கள் குணசேகரன், மனோகர், சுரேஷ், வெற்றிவேல், சாம்ராஜ், ரகு பிரனேஷ் மற்றும் புதிய நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.