Perambalur: DMK district legal team holds consultative meeting!
பெரம்பலூர் மாவட்ட வழக்கறிஞர் அணி ஆலோசனை மற்றும் ஆய்வுக் கூட்டம், மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் தலைமையில் மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. எம்.எல்.ஏ பிரபாகரன் முன்னிலை வகித்தார். மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பா.கவியரசு வரவேற்றார்.
மாநில சட்டத்துறை இணைச் செயலாளர் அருள்மொழி, மத்திய மண்டல பொறுப்பாளர் சுவை.சுரேஷ் கலந்து கொண்டு பேசினர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ள, ஜனவரி 18, 2025, அன்று, சென்னையில் நடைபெறும் தி.மு.க. சட்டத்துறை மாநாட்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து திரளாக கலந்து கொள்வது எனவும், பெரம்பலூர் மாவட்டத்தில் வழக்கறிஞர் அணிக்கு புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது எனவும், 2026- சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதி கைப்பற்ற, வழக்கறிஞர் அணி உறுதுணையாக இருக்கும் எனவும், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள, இரண்டு தொகுதிகளிலும் கட்சி அறிவிக்கும் வேட்பாளர்களை வெற்றி பெற செய்வது எனவும், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தும், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் மாவட்ட வழக்கறிஞர் அணித் தலைவர் அ.கருணாநிதி, மாவட்ட வழக்கறிஞர் அணி துணைத் தலைவர் கே.ஜி. மாரிக்கண்ணன், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர்கள் பி.இளமைச்செல்வன், ச.சத்தியராஜ், ரா.பிரபாகரன், பெ.செந்தில்குமார், பி.சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.