Perambalur: DMK functionary arrested over allegations of illegally extracting gravel soil; commotion ensues as the police station is besieged at midnight.

பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், திமுக பிரமுகருமான பெரம்பலூர் மாவட்ட திமுக ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர்) கே.சி.ஆர் குமார் (55). இவர் கல்குவாரி மற்றும் கிரஷர் நடத்தி வருகிறார்.
இவரது குவாரியில் பொக்லைன் எந்திரம் மூலம் டாரஸ் லாரியில் கிராவல் மண் எடுக்கப்பட்டதாக, பெரம்பலூர் போலீசாருக்கு வந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொக்லைன் எந்திரம் மற்றும் லாரிகளை பறிமுதல் செய்தனர்.

இதனை தொடர்ந்து உரிமையாளர் கே.சி.ஆர். குமார் மற்றும் பொக்லைக் ஆப்ரேட்டர் ராஜா ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்து மாலை விசாரணை முடிந்து வீட்டுக்கு சென்ற நிலையில் ஐஜி பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் மீண்டும் விசாரணைக்கு போலீசார் ஸ்டேசனுக்கு அழைத்து வந்தனர்.

.இதையறிந்த எளம்பலூர் பொதுமக்கள், திமுக கட்சியினர், வழக்கறிஞர்கள், குவாரி கிரசர் உரிமையாளர்கள், உறவினர்கள் என பல தரப்பினரும், ஏராளமானோர் பெரம்பலூர் போலீஸ் ஸ்டேசனை நள்ளிரவு நேரத்தில் முற்றுகையிட்டு விடுவிக்க கோரினார். மறியல் போரட்டத்தில் ஈடுபடுவதாக வந்த தகவலின் பேரில் மேலும், பரபரப்பு ஏற்பட்டது, ADSP ரமேஷ், DSP பாரதிதாசன், இன்ஸ்பெக்டர் வேலுமணி உள்ளிட்ட போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர், இதில் வழக்கறிஞர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது, தொடர்ந்து போலீசார் கேசிஆர் குமாரை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்று, நீதிபதி முன்னிலை ஆஜர்ப்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, குமாரை சொந்த ஜாமீனில் விடுவித்தார். இதனையடுத்து ஊராட்சி தலைவர் கே.ஆர். குமார் சொந்த ஊருக்கு திரும்பினார். நள்ளிரவு நேரத்தில் பெரம்பலூர் டவுன் போலீஸ் ஸ்டேசனில் பொதுமக்கள் முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

KCR KUMAR


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!