Perambalur: DMK meeting decided to set up a government medical college in Veppanthattai union!
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் பொது உறுப்பினர்கள் கூட்டம் கிருஷ்ணாபுரத்தில், அவைத்தலைவர் டி.அம்பேத்கர் தலைமையில் நடந்தது.
ஒன்றிய செயலாளர் செயலாளர் எஸ்.நல்லதம்பி வரவேற்றார்.
வேப்பந்தட்டை யூனியன் சேர்மன் க.ராமலிங்கம், வைஸ்-சேர்மன் எம்.ரெங்கராஜ், ஒன்றிய துணை செயலாளர்கள் மருதாம்பாள் செல்வக்குமார், கே.கிருஷ்ணமூர்த்தி, டி.தங்கமணி, ஒன்றிய பிரதிநிதிகள் வி.முருகேசன், எஸ்.ராமகிருஷ்ணன், டி.முருகேசன்,கிளை செயலாளர்கள் ஆர்.சின்னதம்பி, எம்.ஜெயராமன்,கே.சக்திவேல், ஜெ.பன்னீர்செல்வம், எம்.சரவணன், எஸ்.மணிகண்டன், சுருதி சீத்தாராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன், மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் இரா.ப.பரமேஷ்குமார், பொதுக்குழு உறுப்பினர் எஸ்.அண்ணாதுரை, முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமார்,
வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் ந.ஜெகதீஷ்வரன், வேப்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சி.ராஜேந்திரன், ஆலத்தூர் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் செ.வல்லபன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் வி.ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.
மேற்கு பெரியம்மாபாளையம் அ.தி.மு.க.பிரதிநிதி பெரியசாமி உள்ளிட்ட 25 பேர் அக்கட்சியில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தனர். கூட்டத்தில் 2026 – சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற அனைவரும் பாடுபடவேண்டும்,
அரசு மருத்துவக்கல்லூரியை , வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியத்தில் அமைக்க வேண்டும் என்றும், ஆ.ராஜா எம்.பி. போக்குவரத்துத் துறை அமைச்சர், சா.சி.சிவசங்கர், அருண் நேரு.எம்.பி., எம்.எல்.ஏ.பிரபாகரன் ஆகியோருக்கு கோரிக்கை வைத்தும், செப்டம்பர் 15 , அண்ணா பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.