Perambalur: DMK meeting praised Chief Minister MK Stalin for bringing breakfast program in government-aided schools!
கலைஞர் 100! நூற்றாண்டு நிறைவு பெருவிழா கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட தி.மு.க பொது உறுப்பினர்கள் தீர்மானம்!
பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. சார்பில், கலைஞர் 100! நூற்றாண்டு நிறைவு பெருவிழா, பொது உறுப்பினர்கள் கூட்டம்! அவைத் தலைவர் நடராஜன் தலைமையில் நடந்தது. எம்.எல்.ஏ பிரபாகரன் வரவேற்றார். ஆ.இராசா.எம்.பி.- கே.என்.அருண்நேரு.எம்.பி. சிறப்புரையாற்றினார்கள். மாவட்ட கழகச் செயலாளர் வீ.ஜெகதீசன் – சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்!
இதில் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பா.துரைசாமி, மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் இரா.ப.பரமேஷ்குமார், மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் வி.எஸ்.பெரியசாமி, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் குன்னம் சி.இராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மு.அட்சயகோபால், வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் கி.முகுந்தன், ந.ஜெகதீஷ்வரன்
எஸ்.அண்ணாதுரை, பட்டுச்செல்வி ராஜேந்திரன், அழகு.நீலமேகம், மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில்,சன்.சம்பத், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன், ஒன்றிய கழக செயலாளர்கள் என்.கிருஷ்ணமூர்த்தி, எம்.ராஜ்குமார், எஸ்.நல்லதம்பி, தி.மதியழகன், சி.ராஜேந்திரன், ஒன்றிய பொறுப்பாளர் டாக்டர் செ.வல்லபன், மாவட்ட அரசு குற்றவியல் வழக்கறிஞர் ப.செந்தில்நாதன், தொ.மு.ச.மு.ராஜகாந்தம், வேப்பந்தட்டை ஒன்றிய பெருந்தலைவர் க.ராமலிங்கம், துணை தலைவர் எம்.ரெங்கராஜ், அரும்பாவூர் பேரூர் கழக செயலாளர் ஆர்.ரவிச்சந்திரன், பூலாம்பாடி பேரூர் கழக செயலாளர் செல்வலட்சுமி சேகர், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஆதவன்(எ)ஹரிபாஸ்கர், துணை அமைப்பாளர்கள் டி.ஆர்.சிவசங்கர், அ.அப்துல்கரீம், வ.சுப்ரமணியன், ஆர்.அருண், மா.பிரபாகரன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அரசுப் பள்ளிகளில் காலை உணவு திட்டம் வழங்கியதுபோல , அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இந்த செயற்குழு பாராட்டி மகிழ்கிறது.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிளில், கே.என்.அருண்நேருவிற்கு அதிகளவில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் 85 ஆயிரம் வாக்குகள் பெற்றுத் தந்த பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள அனைத்து நிலை நிர்வாகிகளுக்கு பாராட்டையும், வாக்களித்த வாக்காளர்களுக்கு இந்த செயற்குழு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது, என்றும்,
கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, அவரது புகழ் பரப்பும் வகையில் கிராமங்கள் தோறும் பட்டிமன்றம், கருத்தரங்கம், பொதுக்கூட்டம், தெருமுனைக் கூட்டங்கள் நடத்திட வேண்டும் என்றும்,
நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா.எம்.பி., சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற தொல்.திருமாவளவன் ஆகியோரை வெற்றி பெற செய்த அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும், வாக்களித்த வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும்,
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அன்னியூர் சிவாவை வெற்றி பெற செய்த அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும், வாக்களித்த தொகுதி மக்களுக்கும் நன்றி தெரிவித்தும், இறந்த கட்சியினருக்கு இரங்கல் தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவிஜெயபால் நன்றி கூறினர்.