Perambalur: DMK Union, town General members meeting! District in-charge V. Jagatheesan announcement!
பெரம்பலூர்: ஒன்றிய, நகர, பேரூர் பொது உறுப்பினர்கள் கூட்டம்! மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் அறிவிப்பு
பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் வாரியாக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுவது குறித்து மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ. ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
16.08.2024 அன்று சென்னையில் திமுக தலைவர் தலைமையில் நடைபெற்ற மாவட்டக் திமுக செயலாளர்கள் கூட்டத்தில், தலைவர் அறிவுறுத்தலின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில், ஒன்றிய, நகர, பேரூர் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடக்க உளளது. போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், பெரம்பலூர் எம்.எல்ஏ பிரபாகரன் கலந்து கொள்கின்றனர். இதில்
மாநில நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
செப். 1 அன்று காலை 10 மணி அளவில், வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய கூட்டம் கிருஷ்ணாபுரம் ஜே.பி.எஸ். திருமண மஹாலிலும்,
12.00 மணி அளவில், பூலாம்பாடி பேரூர் நகர் கூட்டம், பூலாம்பாடி ரெட்டியார் திருமண மண்டபத்திலும்,
02.09.2024- திங்கட்கிழமை .காலை 10.00 மணி அளவில் ஆலத்தூர் கிழக்கு ஒன்றியம்.கலைஞர் திடல், கொளக்காநத்தத்திலும்,
12.00 மணி.வேப்பூர் தெற்கு ஒன்றிய கூட்டம் எம்.எஸ்.டி திருமண மண்டபத்திலும்,
மாலை 4.00 மணிக்கு வேப்பூர் வடக்கு ஒன்றிய கூட்டம் ஏஜிஎஸ் சு.ஆடுதுறை திருமண மண்டபத்திலும்,
03.09.2024- செவ்வாய்க்கிழமை . மாலை 4.00 மணிக்கு லப்பைக்குடிக்காடு பேரூர் கூட்டம், லப்பைகுடிக்காடு சலாமத் பள்ளியிலும்,
05.09.2024- காலை 10.00 மணிக்கு பெரம்பலூர் ஒன்றிய கூட்டம், பெரம்பலூர் முத்துகிருஷ்னா மக்கள் மன்றத்திலும்,
07.09.2024- சனிக்கிழமை .காலை 9.00 மணி. ஆலத்தூர் மேற்கு ஒன்றிய கூட்டம், செட்டிகுளம் ஆத்தி நாட்டார் திருமண மண்டபத்திலும்,
11.00 மணிக்கு வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றியம். வி களத்தூர் ஏ.டி.எம் திருமண மண்டபத்திலும்,
9.09.2024-திங்கட்கிழமை. காலை 10.00 மணிக்கு அரும்பாவூர் பேரூர் கூட்டம், அரும்பாவூர் ரெட்டியார் திருமண மண்டபத்திலும், 12.00 மணிக்கு, குரும்பலூர் பேரூர் கூட்டம், குரும்பலூர் ரெட்டியார் திருமண மண்டபத்திலும் கூட்டங்கள் நடைபெறும்.
கூட்டத்தில், 2024-செப்டம்பர் 15, பேரறிஞர் அண்ணாவின் 115- ஆவது பிறந்த நாள் விழா, செப்டம்பர் 16, தி.மு.க.பவள விழா, செப்டம்பர் 17, தந்தை பெரியாரின் 145-ஆவது பிறந்த நாள் விழா, கட்சி ஆக்கப் பணிகள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.