Perambalur: Seniors can apply for Central Government Schemes; Collector Info!

Perambalur Collector Grace Pachuau

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் மூலம் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு SEED (Scheme for Economic Empowerment DNT’S) பொருளாதாரத்தை மேம்படுத்துதல் திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டம் கல்விக்கான அதிகாரமளித்தல் (சீர்மரபினர்களுக்கு ஒன்றிய /மாநில அரசுகளால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்கு நல்ல தரமான பயிற்சி அளித்தல்), சுகாதாரம் (சீர்மரபினர்களுக்கு சிறப்பு காப்பீட்டுத் திட்டம் அளித்தல்), வாழ்வாதாரங்களை எளிதாக்குதல் (DNT/NT/SNT ) சமூக சிறுவனங்களின் சிறிய குழுக்களை உருவாக்க மற்றும் வலுப்படுத்த சமூக மட்டத்தில் வாழ்வாதாரத்திற்கான முயற்சியை எளிதாக்குதல்), நிலம் மற்றும் வீடு (சீர்மரபினர்களுக்கு வீட்டுமனை பட்டா மற்றும் வீடுகள் கட்ட நிதியுதவி வழங்குதல்) போன்ற நோக்கங்களை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது.

மேற்கண்ட திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பயனாளிகள் ஒன்றிய அரசின் இணையதளமான www.dwbdnc.dosje.gov.in என்ற முகவரியில் விண்ணபிக்கலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட ற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலத்தினை நேரில் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!