Perambalur: Door to Door Verification of Voter List; Collector Information!

பெரம்பலூர் கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணைய அறிவிப்புபடி 01.01.2025 என்ற நாளை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்தல் தொடர்பாக சிறப்பு திருத்தப்பணிகள் 20.08.2024 முதல் துவங்கப்பட்டு, தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது.

இச்சிறப்பு சுருக்க முறை திருத்த நடவடிக்கையினை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் 06.01.2025 அன்று வாக்காளர் பட்டியல் வெளியிட பல்வேறு முன்திருத்த நடவடிக்கைகளுக்கான அறிவுறைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, 01.01.2025-ஐ தகுதியேற்பு நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம்கள் நடத்தி எதிர்வரும் 06.01.2025-ல் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.

வாக்காளர் பட்டியல் தொடர்திருத்த பணியின் முதல் நடவடிக்கையாக வாக்குசாவடி நிலை அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வாக்குசாவடி மைய பகுதியில் வசித்துவரும் அனைத்து வாக்காளர்களின் விபரங்களை ஆகஸ்ட் 20 முதல் அக்டோபர் 18 வரை வீடு, வீடாக சென்று சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளார்கள்.

கள ஆய்வின் போது ஒவ்வோரு குடும்பத்தில் உள்ள மொத்த உறுப்பினர்கள் அவர்களில் எவ்வளவு பேர் வாக்காளர்களாக பதிவு செய்துள்ளார்கள் மற்றும் ஒவ்வோரு குடும்பத்திலும் விடுபட்டுள்ள வாக்காளர்களை கண்டறிந்து சேர்த்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சரிபார்ப்பு பணியானது வாக்குசாவடி நிலை அலுவலர்கள் அனைவரும் தேர்தல் ஆணையத்தால் புதியதாக அறிமுகப்படுத்தியுள்ள செயலி வழியாக (BLO APP) மேற்கொள்ள உள்ளனர்.

வாக்குசாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களின் இல்லம் தேடி வரும்போது வாக்காளர்கள் தங்களது பெயர், வயது, புகைப்படம், முகவரி திருத்தம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள தெரிவிக்கலாம். மேலும், வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்கவும், இறந்துபோன அல்லது நிரந்தரமாக புலம் பெயர்ந்த நபர்களை இனம் கண்டு நீக்கம் செய்திடலாம்.

எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தினை சிறப்பாகவும், விரைவாகவும், துரிதமாகவும் இப்பணியினை முடித்திடும் பொருட்டு, பொதுமக்கள் தங்கள் வீட்டிற்கு கணக்கெடுப்பு பணிக்கு வரும் இப்பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள வாக்குசாவடி நிலை அலுவலர்களிடம் தங்களது கோரிக்கைகளை தெரிவித்து அவர்களுக்கு தேவையான விவரங்களை அளித்து ஒத்துழைப்பு வழங்கிடுமாறு தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!