Perambalur: Dravidians are the Nagas who lived 2,000 years ago, says DMK Deputy General Secretary A. Raja M.P..!
திருச்சி மண்டல அளவிலான திமுக மாநில ஆதிதிராவிடர் நலக்குழு அணி நிர்வாகிகள் ஆலோசனை மற்றும் ஆய்வு கூட்டம் பெரம்பலூரில் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு செயலாளர் கிருஷ்ணசாமி எம்எல்ஏ தலைமையில் நடந்தது. போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் முன்னிலை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன், எம்எல்ஏ பிரபாகரன், மாநில பொறியாளர் அணி துணை அமைப்பாளர் பரமேஷ்குமார் உட்பட பலர் பேசினர்.
கட்சி துணை பொது செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா எம்.பி, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், துணை பொதுச்செயலாளர் செல்வராஜ் எம்பி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இதில் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கப்பட்டது. கூட்டத்தில் வரும் சட்டசபை தேர்தலுக்கான பணியை துவங்குவது, வரும் சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற பாடுபடுவது என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி பேசியதாவது (சுருக்கம்) : சமூக நீதி போராளிகள் எல்லாம் சமத்துவ போராளிகள் அல்ல.. அரசியலுக்காக கட்சியினர்கள் அம்பேத்கர் சிலை வைக்கலாம். மாலை மரியாதை செய்யலாம். இவையெல்லாம் அரசியலுக்கான அடையாளங்களை தானே தவிர உண்மையாக அம்பேத்கரின் கருத்தியலை ஏற்றுக் கொண்டதாக அர்த்தமாக கொள்ள முடியாது. இந்தியா சமூக பரப்பில் வாழ்ந்தது இனம் நாகர் இனம். இந்த நாகர் இனம் தான் திராவிடர்கள்.
சிந்து சமவெளிக்கு அப்பால் நாகலாந்து உள்ளிட்ட இந்தியா முழுவதும் திராவிடர்களே உள்ளனர். 2 ஆயிரம், 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திராவிடர்கள் இந்தியா முழுதும் வசித்து வந்துள்ளனர் நாகலாந்தில் நாகர்கோவில் செட்டிகுளம் உள்ளிட்ட தமிழ்நாட்டில் உள்ள பல ஊர்கள் அங்கு உள்ளன.
பிராமணர்கள் இந்த வேதத்தை வைத்துக்கொண்டு, அம்பேத்கர் மானுடவியல், சமஸ்கிருதம், வேதங்களை கற்றார். புத்த மதத்தை தெரிந்து கொள்ள பாலி மொழியை கற்றுக் கொண்டார். அம்பேத்கரும் பெரியாரும் வடக்கு தெற்கில் இருந்தாலும் இருவருமே சாதி ஒழிப்பதில் ஒரே கோட்டில் ஒத்த கருத்து உடையாராக இருந்தனர். இந்து மதத்திற்கு ஆதரவாக காந்தி சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார் இப்போது பெரியார், காந்தி இறந்தால் இந்த நாட்டில் ஒன்றும் ஆகிவிடாது என முதலில் தெரிவித்தார். பஞ்சமார்கள் தாழ்த்தப்பட்டவர்கள் பிற்படுத்தப்பட்டவர்கள், இப்படி எல்லாம் பிராமணத்தால் ஒடுக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதை அம்பேத்கரும் பெரியாரும் 2 துருவத்தில் இருந்து பணியாற்றி உள்ளனர்.
திராவிட முன்னேற்ற இயக்கம் சாதி ஒழிப்பிற்கான இயக்கம். சாதியை பொருட்களை போல உணர முடியாது. அது 2000 ஆண்டுகளுக்கு மேலாக மனித மனத்தில், மூளையில் ஊறிப் போய் உள்ளது. சமூக நீதி போராளிகள் எல்லாம் சாதி ஒழிப்பு போராளிகளாக இருக்க மாட்டார்கள். சாதிபொய் என சொல்கிற குடும்பம் அரசியலில் இருக்கிறது என்றால் அது தலைவர் கலைஞர் கருணாநிதி குடும்பம் தான். அம்பேத்கரும் பெரியாரும் சாதி ஒழிப்பு, ஆண் பெண் சமத்துவம், தீண்டாமை ஒழிப்பில் ஒத்த கருத்து உடையவர்களாக இருக்கிறார்கள். அம்பேத்கரின் கொள்கையை 1940 களிலேயே விடுதலை நாளேட்டின் மூலம் தமிழகத்தில் கொண்டு வந்து சேர்த்து பெருமை பெரியாரையும், திராவிட கட்சிகளையே சாரும். என்னை விட பிறப்பால் தன்னை விட உயர்ந்தவனும் இல்லை! எனக்கு கீழ் ஒருத்தன் பிறப்பால் தாழ்ந்தவனும் இல்லை என்ற கருத்தை திராவிட இயக்கம் தொடர்ந்து பின்பற்றி வருகிறது.
அது திராவிடர்களுக்கு எல்லாம் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன்.. எந்த ஒரு பறையரோ, பள்ளரோ, சிறுபான்மையாக இருக்கும் அல்லது அருந்ததியரையோ மற்றும் பிற சமூகத்தினரையோ பார்த்து தனக்கு கீழானவன் என்ற புத்தி வரக்கூடாது, வந்தால் அதுதான் பார்ப்பனியம்! அது தவறு.. அனைவரையுமே சமமாக பார்க்க வேண்டும்.
பிராமணிய என்ற ஒற்றை சமூகத்தை எதிர்த்து குறிப்பிடவில்லை. எதெல்லாம் சமத்துவத்திற்கு எதிராக இருக்கிறதோ, இதெல்லாம் சுதந்திரத்திற்கு எதிராக இருக்கிறதோ, சமூக நீதிக்கு எதிராக இருக்கிறதோ அதைத்தான் எதிர்க்கிறோம். அம்பேத்கர் பெரியார் தத்துவத்தை ஏற்று தாங்கி இருக்கிற குடும்பமாக இருக்கின்ற காரணத்தினால் தான் அந்த குடும்ப அரசியல் இன்னும் நீடித்து வருகிறது. சாதி எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்து வரும் திமுக விற்கு ஆதிதிராவிடர் நலக்குழு நலக்குழு தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும். சாதி ஒழிப்பு தலைவராக கலைஞர் இருந்தார். அவருக்கு பின்னால், தலைவர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து சாதியை அகற்ற போராடி வருகின்றனர். தெற்கே திமுகவை போல் வேறு எந்த ஒரு கட்சியும் சாதி ஒழிப்பிற்கும், சமுத்துவத்திற்கும் முக்கியத்துவம் தரவில்லை என பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் ராஜேந்திரன், தர்மராஜ், கண்ணபிரான், பாலகிருஷ்ணன், செல்வம், சிவக்குமார், அசோக்குமார், நகர அமைப்பாளர் சுரேஷ் மற்றும் 9 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர் துரைசாமி வரவேற்றார். மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் எளம்பலூர் குமார் நன்றி கூறினார்.