Perambalur: Drunken driver dies in an accident!
பெரம்பலூர் மாவட்டம், அடைக்கம்பட்டியை சேர்ந்தவர் ரெங்கராஜ். இன்று இரவு டி.களத்தூரில் உள்ள மதுபானக் கடையில் மது அருந்திவிட்டு அடைக்கம்பட்டிக்கு பைக்கில் திரும்பி வந்துக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற வாகனத்தின் மீது பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான ரெங்கராஜின் உடலை மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்துள்ளனர். வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.