Perambalur: Easter: AIADMK Candidate Ealambai R.Tamizhselvan Solicits Votes from Devotees Returning from Church After Prayers!

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் இளம்பை. இரா. தமிழ்ச்செல்வன் தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு, பொதுமக்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அதன் தொடர்ச்சியாக, இன்று காலை பெரம்பலூர் துறையூர் சாலையில் உள்ள புனித பனிமயமாதா தேவலாயத்தில் இன்று ஈஸ்டர் பண்டிகை முன்னிட்டு பிராத்தனை முடித்து வந்த கிறிஸ்தவர்களிடம், அதிமுக ஆட்சியின் சாதனைகள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பெரம்பலூர் அதிமுக நகர செயலாளர் ராஜ பூபதி, அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் வீரபாண்டியன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் உடன் சென்றிருந்தனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!