Perambalur Edatheru Sri Rajagopalaswamy Temple Kumbabhishekah ceremony took place today!
பெரம்பலூர் எடத்தெரு ஸ்ரீ ராஜகோபால சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேக விழா இன்று காலை வெகு விமர்சையாக நடைபெற்றது. காலை 7 மணியளவில் நான்காம் கால யாகசாலை ஆரம்பித்து 8:30மணியளவில் கடங்கல் புறப்பாடு செய்து ஸ்ரீராஜகோபாலசாமி, ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீஆண்டாள்,உற்சவர் ஸ்ரீசந்தானகிருஷ்ணன், கருடாழ்வார், துவாரபாலகர், ஆகிய மூலவர்களுக்கு மகா சம்புரோஷனம் செய்து மகாதீபாரானை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
கோ.சரவணன் முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன், செயல் அலுவலர் கோவிந்தராஜன், ராஜா ஸ்டோர் மகேஸ்வரன், குமார், யாதவர் சங்க நிர்வாகிகள் நாதப்பன், கலியபெருமாள், கருப்பையா, மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு கிருஷ்ணனை வழிபாடு செய்தனர்.
கும்பாபிஷேகம் முடிந்ததும் பக்தர்கள் அனைவருக்கும் தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது அதனைத் தொடர்ந்து அன்னலட்சுமி திருமண மண்டபத்தில் வந்திருந்த அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது . பூஜைகளை சென்னை உ.வெ. விக்ரமன் குழுவினர் செய்திருந்தனர். விழா ஏற்பாடுகள் கோ.சரவணன் மற்றும் நகர யாதவர் சங்கம் செய்திருந்தனர்.
விளம்பரம்: