Perambalur: Electricity Saving Week Awareness Rally!
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மின் சிக்கன வார விழிப்புணர்வு பேரணி மேற்பார்வை பொறியாளர் வீ. மேகலா கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் மின் சிக்கனம் குறித்து பொது மக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வரையில் பிரச்சார வாகனத்தில் வாசகங்களை ஒலிக்க செய்தும், துண்டு பிரகரங்களை பொது மக்களிடையே விநியோகம் செய்யப்பட்டது.
பேரணி 4 ரோடு மின் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு, பெரம்பலூரில் துபுதிய பேருந்து நிலையம் ரவுண்டானா வழியாக மத்திய அலுவலகம் வந்தடைந்தது.
பேரணியில், பெரம்பலூர் மின் பகிர்மான வட்டத்தின் கோட்டப் பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் மற்றும் மின் வாரிய பணியாளர்கள் கலந்து கொண்டனர்.