Perambalur: Employee dies at MRF tyre factory! Police investigating!!
பெரம்பலூர் மாவட்டம், இரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம் மகன் பிச்சை(50), இவர் பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், விஜயகோபாலபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும், MRF டயர் தொழிற்சாலையில் TCC யூனிட்டில் தினக் கூலியாக வேலை பார்த்து வந்துள்ளார்.
வழக்கம் போல் இன்று காலை வேலைக்கு சென்ற பிச்சை திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்து விட்டார். இதனையறிந்த தொழிற்சாலை நிர்வாகிகள் பிச்சையை அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி (தனலட்சுமி சீனிவாசன்) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். பிச்சையின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்த தகவலின் பேரில் பாடலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் டயர் தொழிற்சாலையில் பணியில் ஈடுபட்டிருந்த போது மயங்கி விழுந்து உயிரிழந்த பிச்சைக்கு சித்ரா(45), என்ற மனைவியும் கௌசல்யா(25), என்ற ஒரு மகளும் நவீன்(22) என்ற ஒரு மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.