Perambalur: Employment camp for 8th to degree students; Collector Information!
பெரம்பலூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கத்தோடு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டல் மையம் இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 19.10.2024 அன்று பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் காலை 09.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை நடைபெற உள்ளது.
வேலைவாய்ப்பற்ற 18 – 35 வயது வரையிலான 8-ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டபடிப்பு வரை பயின்றவர்கள், பொறியியல், ஐடிஐ, டிப்ளமோ, மற்றும் நர்சிங் முடித்த இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
பெரம்பலூர் மாவட்டத்ததை சார்ந்த தனியார்த்துறை நிறுவனங்கள் இம்முகாமில் கலந்து கொள்ள http.//www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது நிறுவனம் குறித்த விவரங்களை 30.09.2024-க்குள் பதிவு செய்து இவ்வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.
இது குறித்து மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அவர்களை 94990 55913 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தங்களது பதிவினை உறுதி செய்து கொள்ளுமாறும், மேலும், படித்து வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்கள் இவ்வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறும் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.