Perambalur: “Ensure Nutrition” Phase 2; Minister Sivashankar inaugurated by providing nutritional boxes

தமிழ் நாட்டில் பிறந்தது முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகளில் பலரும் ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்களாக இருப்பதைத் கண்டறிந்து, மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ உதவியும், ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து திட்டமும் வழங்கிட வேண்டும என்ற நோக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 21.05.2022 அன்று “ஊட்டச்சத்தை உறுதி செய்” என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, தற்போது 2வது கட்டமாக “ஊட்டச்சத்தை உறுதி செய்” திட்டத்தினை 15.11.2024 அன்று அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்டத்தில் துறைமங்கலம் குழந்தைகள் நல மையத்தில், பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதிக்களுக்குட்பட்ட 25 எடைக்குறைவாக பிறந்த குழந்தைகளின் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஆவின் நெய் (500 மி.லி-1), பேரீச்சம்பழம் (500 கிகி-2), சிறப்பு உணவு ஆரோக்கிய கலவை (Protein Powder) (500 கிகி-2), இரும்புச்சத்துக் கரைசல் (3 பாட்டில்), குடற்புழு நீக்க மாத்திரை, துண்டு(1), கப்(1), கூடை(1) ஆகியவை அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகத்தினையும், குழந்தைகள் மையத்தில் இருந்த குழந்தைகளுக்கு சத்து உருண்டைகளையும் போக்குவரத்துத்துறை அமைச்சர் வழங்கினார்.

மேலும், பிறந்தது முதல் 6 மாத குழந்தைகளுக்கு திட உணவு வேறு ஏதுமின்றி தாய்ப்பால் மட்டுமே வழங்கப்படுவதால் தாய்மார்களின் ஆரோக்கியத்தை பேணுவது அத்தயாவசியமாகிறது. 6 மாதத்திற்குட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையின்படி, மாநிலம் முழுவதும் 26,215 குழந்தைகள் கடும் ஊட்டச்சத்து குறைபாட்டிலும், 50,490 குழந்தைகள் மிதமான ஊட்டச்சத்து குறைபாட்டிலும் உள்ளார்கள் என கண்டறியப்பட்டுள்ளது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் 330 குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுடனும் 594 குழந்தைகள் மிதமான ஊட்டச்சத்து குறைபாடுடனும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இக்குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மேம்படுத்துவதற்காக ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படுகிறது.

வலிமையான குழந்தைகளை வளர்க்க வேண்டும், கருவுற்ற பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களை காத்திட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டத்தை தாய்மார்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

பெரம்பலூர் சேர்மன் மீனா அண்ணாதுரை, முன்னாள் எம்.எல்.ஏ துரைசாமி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப்பணிகள் அலுவலர் ஜெயஸ்ரீ, குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் பிரேமா (பெரம்பலூர்), அருணா (வேப்பந்தட்டை), பூமா (வேப்பூர்), பெரம்பலூர் தாசில்தார் சரவணன், குழந்தைகள் நல மைய அமைப்பாளர்கள், பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். துறைமங்கலம் திமுக கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!