Perambalur: Entrepreneurship and Innovation” ; Certificate Course; Fee Rs.80k! Collector Info!
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் அமைச்சர் தாமோ. அன்பரசன் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிவித்ததின்படி, அஹமதாபாத்தில் உள்ள இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்துடன் இணைந்து தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் “தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்கம்” (Entrepreneurship and Innovation) என்ற ஓராண்டு சான்றிதழ் படிப்பை சென்னையில் தொடங்கவுள்ளது. தொழில்முனைவோராக விரும்பும் நபர்களுக்கு இந்த படிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த ஓராண்டுக்கான சான்றிதழ் படிப்பிற்கான வகுப்புகள் 14.10.2024 அன்று முதல் தொடங்க உள்ளதால், விண்ணப்பங்கள் தற்போது முதல் பெறப்படுகின்றது. academy@editn.in என்ற இணையதளத்தில் தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்த வகுப்பில் சேருவதற்கான கட்டணம் ரூ 80,000/- ஆகும். இதில் சேர 21 வயது முதல் 40 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டம் அல்லது டிப்ளமோ அல்லது ஐடிஐ அல்லது 10வது அல்லது +2 மற்றும் தொடர்புடைய இரண்டு வருட அனுபவத்துடன் இருக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராம்குமாரை 9677898633 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், இவ்வாறு தெரிவித்துள்ளார்.