Perambalur: Even in the pouring rain, people gathered in waves, women and volunteers welcomed Chief Minister M.K.Stalin!
அரியலூரில் இருந்து நேற்று காலை நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு, மாலை பெரம்பலூருக்கு வருகை தந்த, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா.எம்.பி., ஏற்பாட்டில், ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளரும், ஆலத்தூர் சேர்மனுமாக என்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில், மேலமாத்தூர் கிராமத்திலும், பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், எம்.எல்ஏ பிரபாகரன் ஆகியோரது தலைமையில் குன்னம், 4 ரோடு ஆகிய இடங்களில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கொட்டும் மழையிலும் பெண்கள் நனைந்து கொண்டே ஆராவரத்துடன் பூர்ண கும்பத்துடன் வரவேற்பளித்தனர். வழியெங்கும் திருவிழா போல், மேளதாளங்கள் முழங்கவும், கரகாட்டத்துடனும், பொதுமக்கள், பெண்கள் உற்சாக வரவேற்பில் திளைத்த முதலமைச்சர் உற்சாகத்துடன் அவர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.
இதில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு முகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, வேளாண்மை மற்றும் உழவர் நலன்துறை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா,போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன், தொழிலாளர் நலத்துறை மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன்,
நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.இராசா, கே.என்.அருண்நேரு, சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், மாவட்ட செயலாளர்கள் வீ.ஜெகதீசன்,
மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் குன்னம் சி. இராஜேந்திரன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பா.துரைசாமி, மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் இரா.ப.பரமேஷ்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மு.அட்சயகோபால், வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில்,சன்.சம்பத், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஆதவன்(எ)ஹரிபாஸ்கர், துணை அமைப்பாளர்கள் டி.ஆர்.சிவசங்கர்,
வ.சுப்ரமணியன், அ.அப்துல்கரீம், மா.பிரபாகரன், பொதுக்குழு உறுப்பினர்கள் செ.அண்ணாதுரை, பட்டுச்செலவி ராஜேந்திரன், அழகு.நீலமேகம், ஒன்றிய கழகச் செயலாளர்கள் எம்.ராஜ்குமார், எஸ்.நல்லதம்பி, தி.மதியழகன், சி.ராஜேந்திரன், ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் டாக்டர் செ.வல்லபன், ந.ஜெகதீஷ்வரன், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தங்க.கமல், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தி.இராசா, மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் எம்.மணிவாசகம், தொ.மு.ச.மாவட்ட கவுன்சில் தலைவர் கே.கே.எம்.குமார், தொ.மு.ச.மாவட்ட கவுன்சில் செயலாளர் ஆர்.ரெங்கசாமி, பேரூர் செயலாளர்கள் எம்.வெங்கடேசன், ஆர்.ரவிச்சந்திரன், செல்வலெட்சுமி சேகர், ஜாகிர் உசேன், ஒன்றிய பெருந்தலைவர்கள் மீனா அண்ணாதுரை, க.ராமலிங்கம், பிரபா செல்லப்பிள்ளை உள்ளிட்ட 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.