Perambalur: Everyone whose name is on the ration card should register fingerprints; Collector Information!
பெரம்பலூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருள்கள் பெறும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் தங்களது குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் கைரேகையினை பொருட்கள் பெறும் நியாயவிலைக் கடையில் உள்ள விற்பனை முனைய இயந்திரத்தின் (POS) மூலம் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். பிற மாநிலங்களை சார்ந்த நபர்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் வேலை நிமித்தமாக தங்கியுள்ளனர்.
அவர்களும் தங்களது கைரேகையினை அருகாமையில் உள்ள நியாய விலைக் கடையில் பதிவு செய்யும் விதமாக நியாய விலை விற்பனை முனைய இயந்திரத்தில், IMPDS e-KYC (Integrated Management of Public Distribution System electronic Know Your Customer), என்ற வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வசதியினை பயன்படுத்தி வெளி மாநில தொழிலாளர்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் தாங்கள் வேலைபார்க்கும் கிராமத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் தங்களது குடும்ப அட்டை எண் மற்றும் ஆதார் எண்ணை கொண்டு சென்று தங்களது கைரேகையினை பதிவு செய்யலாம். எனவே வெளி மாநில தொழிலாளர்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயனடையுமாறு கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.