Perambalur: Exam for Secondary Teachers: Collector Grace Pachuau Visits and Examines!
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு இன்று மாநிலம் முழுவதும் நடைபெற்றது. அதனடிப்படையில், பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மேல்நிலைபள்ளியில் இத்தேர்வு நடைபெற்றது, இத்தேர்விற்காக விண்ணப்பித்த 291 நபர்களில் 287 நபர்கள் தேர்வெழுதினர்.
பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தேர்வு மையத்தினை பார்வையிட்ட கலெக்டர் தேர்வர்கள் முறையான நுழைவுச்சீட்டு , அடையாள அட்டை வைத்துள்ளார்களா என்று பார்வையிட்டார். மேலும், தேர்வு மையத்தில் போதிய அடிப்படை வசதிகள் உள்ளதா என்றும், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்றும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.