Perambalur: Exemplary award for transgenders who have made progress due to their unique talents; Collector’s information!
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் திருநங்கைகளில் சமூகத்தில் சந்திக்கும் எதிர்ப்புகளை மீறி தங்களுடைய சொந்த முயற்சியில் படித்து தனித்திறமை கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேறியவர்களில் ஒருவருக்கு திருநங்கையர் தினமான ஏப்ரல் 15 அன்று முன்மாதிரி விருது, 1,00,000/-த்திற்கான காசோலை மற்றும் பாராட்டுச்சான்றிதழ் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் 2025-ஆம் ஆண்டிற்கான விண்ணப்பங்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தகுதிகளுடைய திருநங்கையரிடமிருந்து வரவேற்கப்படுகிறது. இவ்விருதிற்கு விண்ணப்பிக்கும் திருநங்கைகள் பெரம்பலுார் மாவட்டத்தினை இருப்பிடமாக கொண்டு இருத்தல் வேண்டும், இவ்விருதுக்கான விண்ணப்பத்தினை தமிழக அரசின் (awards.tn.gov.in) என்ற இணையதளத்தில் 10.02.2025 தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும், திருநங்கைகள் அரசு உதவி பெறாமல் சுயமாக வாழ்க்கையில் முன்னேறி உதவியிருக்க வேண்டும், குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது அவர்கள் வாழ்க்கையில் முன்னேற உதவியிருக்க வேண்டும், திருநங்கைகள் நல வாரியம் உறுப்பினராக இருத்தல் கூடாது, தகுதியான திருநங்கைகளுக்கு முன்மாதிரி விருது 1,00,000/- த்திற்கான காசோலை மற்றும் பாராட்டுச்சான்றிதழ் திருநங்கையர் தினமான ஏப்ரல் 15 அன்று வழங்கப்பட உள்ளது.
இது தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு பெரம்பலுார் மாவட்ட சமூக நல அலுவலகத்தினை நேரிலோ அல்லது 04328-296209 என்ற தொலைப்பேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.