Perambalur: Extension of time limit for Samba paddy crop insurance; Collector informs!
தமிழ்நாடு விவசாயிகளின் கோரிக்கைக் கிணங்க நடப்பு 2024-2025-ஆம் ஆண்டில், தமிழ்நாடு அரசால் எடுக்கப்பட்ட தொடர் முயற்சியால், சம்பா நெல் பயிர் காப்பீட்டிற்கான காலவரம்பு 30.11.2024 வரை நீட்டித்து மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இத்திட்டத்தில் இதுவரை சம்பா பட்டத்தில் நெற்பயிரை காப்பீடு செய்யாத விவசாயிகள் மட்டும் காப்பீடு செய்து பயன்பெறலாம்.
மேலும், சனி (23.11.2024) மற்றும் ஞாயிற்றுக் கிழமையில் (24.11.2024) பொது சேவை மையங்கள் செயல்படுவதால், பெரம்பலூர், மாவட்டத்தில் நவம்பர் 30-ஆம் தேதிக்குள் இதுவரை சம்பா நெற்பயிரை காப்பீடு செய்யாத விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்து பயனடையுமாறும், ஏற்கனவே பதிவு செய்த விவசாயிகள் மீண்டும் பதிவு செய்ய வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் நிர்ணயம் செய்யப்பட்ட காலக்கெடுவுக்குள் காப்பீடு செய்து பயன்பெறுமாறு கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.