Perambalur: Extension of time to regularize unauthorized educational institution buildings; Collector’s information!
பெரம்பலூர் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக எல்லைக்குள் அமையும் திட்டமில்லா பகுதிகளில் 01.01.2011-ற்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களுக்கு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பாக 01.07.2025 முதல் 30.06.2026 வரை ஓராண்டு காலம் கால அவகாசம் நீட்டிப்பு செய்து அரசாணை எண்.76, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் (நவ(3)) துறைநாள்.14.06.2018-ல் குறிப்பிடப்பட்ட வழிகாட்டுதல்களில் எவ்வித மாற்றமும் இல்லாமல் அரசாணை எண்.92, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் (நவ(3)) துறை, நாள்.26.06.2025-ல் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. www.tcponline.tn.gov.in என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம். பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்வி நிறுவனங்களின் உரிமையாளர்கள் இந்த இறுதி வாய்ப்பினை தவறாது பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பெரம்பலூர் கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.