Perambalur: Farewell to Honest Collector Karpagam!
ஏழை எளியவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சித்தவர். சுமார் ஒன்றரை ஆண்டுகாலம் பணியாற்றிதில், ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னேற பல அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்க முன்வந்தவர். பொதுமக்கள் கிராம சபைக் கூட்டம், அல்லது கிராமங்களுக்கு அலுவல் காரணமாக செல்லும் போது, அங்கிருக்கும் மக்கள் விடுக்கம் வாய் வழி கோரிக்கைகளை செவி கொடுத்து பொறுமையுடன் கேட்டு, அந்த இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு அதற்கான தீர்வுகளை கண்டார். எளிய மக்கள் கலெக்டர் கற்பகத்தை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். பல பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டுள்ளார்.
மேலும், அரசுக்கு சொந்தமான நிலங்கள், துறைமங்கலம் ஏரி உள்பட பல இடங்களில் கோடிக்கணக்கான மதிப்புள்ள நிலங்களை மீட்டுள்ளார்.
இதற்கு முன்பு வந்த பெண் கலெக்டர்களில் ஒருவர் பணிமாறுதலாகி செல்லும் நாள் அன்று கூட 1.75 கோடி காரில் எடுத்து சென்றார். மற்ற அதிகாரிகள் திடடப்பணிகளுக்கு 1.5 சதவீதம் கமிசன் பெறுவார்கள்.
ஆனால், கலெக்டர் கற்பகம் லஞ்சம் வாங்காத கைபடியாத கரத்திற்கு சொந்தக்காரர். பல ஏழை எளிய பெண்களுக்கு பல வழிகாட்டியும், வாழ்க்கை முன்னேறவும், உதவியுள்ளார். மக்களின் அன்போடு கலெக்டர் கற்பகம் இன்று புதிய கலக்டர் கிரேசியிடம் ஒப்படைத்து சென்னைக்கு பணிமாறுதலாகி சென்றார்.