Perambalur: Farmer dies after being bitten by a snake!
பெரம்பலூர் அருகே உள்ள கீழக்கரை கிராமத்தை சேர்ந்தவர் நல்லப்பா மகன் வேணுகோபால் (73), இவரது மகன் நல்லுசாமி (50), இருவரும் நேற்று வயல்காட்டில், மாட்டிற்கு தீவனம் அறுத்துக் கொண்டிருந்தனர். அப்போது, வேணுகோபாலை கட்டுவிரியன் பாம்பு கடித்துள்ளது. கடித்த பாம்பை அடித்து எடுத்துக் கொண்டு, நல்லுசாமி தனது தந்தையை பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளார். சிகிச்சையின் போது வேணுகோபால் உயிரிழந்தார். இது குறித்து நல்லுசாமியின் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.