Perambalur: Farmers strike the road due to non-availability of government free seed maize!
பெரம்பலூர் அருகே உள்ள வேப்பந்தட்டையில், இன்று காலை விவசாயிகள் சாலை மறியல் ஈடுபட்டதால் வரும் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையில், வட்டார வேளாண்மை வளர்ச்சி அலுவலகம் இயங்கி வருகிறது. அங்கு விவசாயிகளுக்கு மானிய விலையில் இலவசமாக மக்காச்சோள வீரிய விதைப்பைகள் வழங்கப்பட்டு வருகிறது .
இதில் விவசாயிகளுக்கு கிடைக்காததால் இன்று காலை விவசாயிகள் ஒன்று திரண்டு, பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் சாலை மறியல் ஈடுபட்டனர். மேலும் விவசாயிகளிடம், விதைப்பை வழங்கும்போது அதற்கு படைப்புழு மற்றும் சத்து டானிக் போன்றவற்றையும் ரூ 500 பெற்றுக் கொண்டு வழங்குவதாகவும், ஆலத்தூரில் 600 ரூபாயும், கொளக்காநத்தத்தில் 750 ரூபாய் பெற்றுக் கொண்டும் வழங்குவதாகவும் குற்றம் சாட்டி மறியலில் ஈடுபட்டவர்கள் கோசமிட்டு போராட்டம் நடத்தினர்.
அங்கு வந்த அதிகாரிகள் , மற்றும் அரும்பாவூர் போலீசார் விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி மேலும் தொடர்ந்து இலவச விதைகள் வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் ஆத்தூர் பெரம்பலூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.