Perambalur : Father denounced suicide by drinking poison son

Poison1 பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், இனாம்அகரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆதி. இவரது மகன் பெரியசாமி (வயது30). வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இதனால் ஆதி மகன் பெரியசாமியை வேலைக்கு போகாமல் வீட்டிலேயே இருப்பது குறித்து கண்டித்துள்ளார்.

இதனால் மனமுடைந்த பெரியசாமி வீட்டில் ஆட்கள் யாரும் இல்லாதபோது பூச்சிமருந்தை குடித்து விட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அதனை கண்ட உறவினர்கள் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் கொண்டுபோய் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வி.களத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!