Perambalur: Father of 3 children commits suicide over family dispute!

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே உள்ள தெரணி கிராமத்தைச் சேர்ந்தவர் மருதை மகன் சாமிநாதன் (36). இவர் லாரி டிரைவராக வேலை செய்து வந்தார். குடிபழக்கத்திற்கு ஆளான சாமிநாதன் தினமும் இரவு மது அருந்திவிட்டு வீட்டுக்கு செல்வாராம். இதனை, சாமிநாதனின் மனைவி கார்த்திகா பலமுறை கண்டித்தும் கேட்கவில்லை என கூறப்படுகிறது. மேலும், கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாத சாமிநாதன் தொடர்ந்து மது குடித்து போதையில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் பாடாலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சாமிநாதனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட சாமிநாதனுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.










kaalaimalar2@gmail.com |
9003770497