Perambalur: File a complaint with the “Namma Salai” campaign for road repairs; Collector’s information!
தமிழ்நாடு அரசின் மாநில நெடுஞ்சாலை துறையால் பராமரிக்கப்படும் சாலைகளில் உள்ள பள்ளங்கள் சேதங்கள் அல்லது பிற சேவை குறைபாடு குறித்த புகார்களை தீர்க்க “நம்ம சாலை” என்ற தொலைபேசி செயலி தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த செயலி மூலம், பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள சாலையில் பள்ளங்களோ, குழிகளோ, சேதங்களோ அல்லது இதர இடர்பாடுகளோ இருந்தால், அதனை படம் எடுத்து பதிவேற்றலாம். மாநில நெடுஞசாலைகள் 24 மணி நேரத்திலும், மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும் சரி செய்யப்படும். சாலை சீரமைக்கப்பட்ட பிறகு அந்த படங்களும் இந்த செயலில் பதிவேற்றப்படும்.
குறிப்பாக தற்போது மழைக்காலமாக இருப்பதால் பொதுமக்கள தங்களது பகுதியில் உள்ள சாலை குறைபாடுகளை இந்த செயலியில் பதிவேற்றம் செய்து பயனடைய வேண்டும் என கலெக்டர் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்