Perambalur: Final voter list; Collector releases it in the presence of political parties!
இந்திய தேர்தல் ஆணையத்தின் கால அட்டவணைப்படி பெரம்பலூர் மாவட்டத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியல் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கிரேஸ் பச்சாவ், ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் 29.10.2024 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 147. பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 3,03,803 வாக்காளர்களும் 148. குன்னம் சட்டமன்ற தொகுதியில் 2,75,937 வாக்காளர்களும் ஆக மொத்தம் 5,79,740 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். அதன் பின்னர் நடைபெற்ற சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் தொடர்பாக பெறப்பட்ட படிவங்களின் பேரில் 147.பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 2,714 ஆண் வாக்காளர்களும், 3,640 பெண் வாக்காளர்களும், 148.குன்னம் சட்டமன்ற தொகுதியில் 2,029 ஆண் வாக்காளர்களும், 2,870 பெண் வாக்காளர்களும் வாக்காளர் பட்டியலில் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இறப்பு, இரட்டை பதிவு மற்றும் இடம்பெயர்வு காரணமாக 147.பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 1,297 ஆண் வாக்காளர்களும், 1,562 பெண் வாக்காளர்களும், இதர 2 வாக்காளர்களும் 148. குன்னம் சட்டமன்ற தொகுதியில் 975 ஆண் வாக்காளர்களும், 1,084 பெண் வாக்காளர்களும், நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்,
தற்போது வெளியிடப்படுகின்ற இறுதி வாக்காளர் பட்டியலின் படி 147.பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் தற்போது 332 வாக்குச்சாவடிகளும், 148. குன்னம் சட்டமன்ற தொகுதியில் 320 வாக்குச்சாவடிகளும், ஆக மொத்தம் 652 வாக்குச்சாவடிகள் உள்ளன.
- பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் உள்ள 332 வாக்கு சாவடிகளில் மொத்தம் 3,07,296 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1,49,106 ஆண் வாக்காளர்களும், 1,58,162 பெண் வாக்காளர்களும், 28 இதர வாக்காளர்களும் உள்ளனர்.
- 148.குன்னம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 320 வாக்கு சாவடிகளில் மொத்தம் 2,78,777 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1,37,485 ஆண் வாக்காளர்களும், 1,41,290 பெண் வாக்காளர்களும், 2 இதர வாக்காளர்களும் உள்ளனர். இதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இரு சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 5,86,073 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2,86,591 ஆண் வாக்காளர்களும், 2,99,452 பெண் வாக்காளர்களும், 30 இதர வாக்காளர்களும் உள்ளனர்.
வருவாய் மற்றும் தேர்தல் துறை பணியாளர்கள் , பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதி உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் / வருவாய் வட்டாட்சியர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.