Perambalur: First Aid Training Courses for Vehicle Driver – Conductors at Andimuthu Chinnapillai Trust; MLA Prabhakaran inaugurated!

தமிழ்நாடு அரசின் உயர்திறன் மேம்பாட்டு துறை சார்பில் வாகன ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கான ஒரு நாள் பயிற்சி வகுப்புகள் சிவகாமம் மோட்டார்ஸ் நிறுவனத்தில் நடைபெற்றது. ஆண்டிமுத்து சின்னப்பிள்ளை அறக்கட்டளை, அபெக்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்தியது. அபெக்ஸ் நிறுவன மண்டல அலுவலர் வெங்கடாசலம், பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன் மற்றும் ஆண்டிமுத்து சின்னப்பிள்ளை டிரஸ்டி, அரசு வழக்கறிஞர் ஆர் .சந்தானலட்சுமி ஆகியோர் தலைமை வகித்தனர். எம்.எல்.ஏ பிரபாகரன் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். இதில் பெரம்பலூர் போக்குவரத்துத் துறை அதிகாரி பி. பிரபாகர், பிரியம் மருத்துவமனை உரிமையாளர் டாக்டர் எஸ்.விவேக், டவுன் டிராபிக் இன்ஸ்பெக்டர் கே.முகம்மது அனிபா கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், வாகன ஓட்டிகள் அவசியம் தெரிந்திருக்கக்கூடிய மாரடைப்பு, தீக்காயம், ரத்த அழுத்தம், பக்கவாதம், பாம்புக்கடி ,தலைசுற்றல், மயக்கம் அடைதல், கண்களில் கோளாறு உள்ளிட்ட அடிப்படை சுகாதார விஷயங்களை அறிந்திருக்க வேண்டும். அதன் அடிப்படையில் பயிற்சிகளை மேற்கொள்ள, தமிழ்நாடு அரசு, ஆண்டிமுத்து சின்னப்பிள்ளை அறக்கட்டளைக்கு அனுமதி வழங்கியுள்ளது. எனவே இனிவரும் காலங்களில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் பயிற்சி பெறுபவர்கள் சுகாதாரம், முதலுதவி சிகிச்சை பயிற்சிகளை கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். அதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை இந்த ஆண்டிமுத்து சின்னப்பிள்ளை அறக்கட்டளை நிறுவனம் பெற்றிருக்கிறது எனவும் தெரிவித்தார்.

முன்னதாக இந்தப் பயிற்சி வகுப்பினை குத்துவிளக்கு ஏற்றி வைத்து பேசிய ஆண்டிமுத்து சின்னப்பிள்ளை அறக்கட்டளை அறங்காவலர் செல்வி சந்தானலட்சுமி பேசியபோது, எங்களது நிறுவனத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பயிற்சிக்கு கட்டமைப்பு வசதிகள் மற்றும் இயந்திரங்கள், சுகாதார ஆய்வகங்கள், அரசு வழிகாட்டுதலின்படி செயல்படுத்துவதாக தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், சிவகாமம் இயக்குநர் இரா.ப.பரமேஷ்குமார், நகர் மன்ற துணை தலைவர் ஆதவன், தி.மு.க.மாவட்ட துணை செயலாளர் சன்.சம்பத், வழக்கறிஞர் கண்ணன், எம்.மணிவாசகம் மற்றும் சிவகாமம் ஊழியர்கள் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து பயிற்சி வகுப்பு ஓட்டுநர்களும் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!