focal demonstration of the Anganwadi workers at Perambalur infront of ICDS Office
பெரம்பலூரில் அங்கன்வாடி பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர் ஊட்டச் சத்து அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று நடத்தினர்.
மாவட்டச் செயலர் கி. மணிமேகலை தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், 110 விதியின் கீழ் தமிழக முதல்வர் அறிவித்த காலமுறை ஊதியத்தை வழங்க 7-வது ஊதிய குழுவில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களை சேர்க்க வேண்டும்.
குறு மைய பணியாளர்களில் 3 ஆண்டுகள் முடித்தவர்களுக்கும், 10 ஆம் வகுப்பு முடித்த உதவியாளர்களில் 5 ஆண்டுகள் முடித்தவர்களுக்கும் பதவி உயர்வு அளிக்க வேண்டும்.
குறைந்த பட்ச ஊதியமாக மாதம் ரூ. 15,000 வழங்க வேண்டும். மிஷ்சன்மோடு திட்டத்தின் பெயரில் தனியாரிடம் ஒப்படைக்கக்கூடாது.
மே மாத விடுமுறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும். ஓய்வுபெறும்போது அங்கன்வாடி பணியாளர்களுக்கு ரூ. 3 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ. 2 லட்சமும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தினர்
இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்டத் தலைவர் என். பானுமதி, நிர்வாகிகள் நீலவேணி, ஆர். சக்தி, தனம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.