Perambalur: Folk art troupe performs a program on AIDS and sexually transmitted diseases; Collector inaugurates the event.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலுவலகம் இணைந்து எச்.ஐ.வி / எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நாட்டுப்புற கிராமிய கலை குழு கலை நிகழ்ச்சியை கலெக்டர் ஷரண்யா தொடங்கி வைத்து, பொது மக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

எச்.ஐ.வி தொற்றினை பூஜ்ஜியமாக கொண்டு வருவதும், புதிய தொற்று இல்லாமை, எச்.ஐ.வி / எய்ட்ஸால் இறப்பு இல்லாமை மற்றும் எச்.ஐ.வி / எய்ட்ஸ் உள்ளோரை புறக்கணிக்காமை என்ற தேசிய கட்டுப்பாட்டு நிறுவனத்தின் நோக்கத்தினை அடையும் வகையில் பல்வேறு திட்டங்களை சிறப்புடன் செயல்படுத்தி வருகிறது. எச்.ஐ.வி எய்ட்ஸ் பற்றிய அடிப்படை தகவல்கள் மக்களுக்கு எளிதில் புரியும் வகையில் கொண்டு சேர்ப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

பெரம்பலூர் மாவட்டத்தில் செஞ்சேரி, அயிலூர், அன்னமங்கலம், ரஞ்சன்குடி, சிறுகுடல் மற்றும் செட்டிக்குளம் ஆகிய கிராமங்களில் நாட்டுப்புற கலைகளான கரகாட்டம், பறை இசை மற்றும் ஒயிலாட்டம் போன்ற 10 கிராமிய நிகழ்ச்சிகள் மூலமாக எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற உள்ளது. மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு பணியாளர்கள், நம்பிக்கை மைய ஆலோசகர்கள், எச்.ஐ.வி சேவை பிரிவு தொண்டு நிறுவனர் பணியாளர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!