Perambalur: Former DMK district secretary and MP S. Sivasubramanian’s memorial day; party members pay tribute by garlanding him!
பெரம்பலூர் மாவட்டதிமுக முன்னாள் செயலாளலும், ஆண்டிமடம் தொகுதி சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினரும்,போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கரின் தந்தையுமான மறைந்த எஸ்.சிவசுப்ரமணியனின் 6- ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு,பெரம்பலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு, மாவட்ட பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் தங்க.சித்தார்த்தன், மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் குன்னம் சி.ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் கி.முகுந்தன், செ.அண்ணாதுரை, மாவட்ட துணைச் செயலாளர் தழுதாழை பாஸ்கர், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன், ஒன்றிய கழகச் செயலாளர்கள் ம.ராஜ்குமார் செ.நல்லதம்பி, தி.மதியழகன்,சிராஜேந்திரன், ஒன்றிய கழக பொறுப்பாளர் டாக்டர் செ.வல்லபன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஆதவன், துணை அமைப்பாளர்கள் அ.அப்துல்கரீம், டி.ஆர்.சிவசங்கர், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தங்க.கமல், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் க.ராமலிங்கம், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தி.இராசா, துணை அமைப்பாளர் ஜி.கே.மூர்த்தி, மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் க.ரமேஷ், மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் கோபாலபுரம் செல்வராஜ், மாவட்ட பிரதிநிதி எஸ்.அழகுவேல், வேப்பூர் கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ரா.சிவா மற்றும் மதுபாலன்,விஜி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.