Perambalur: Free Coaching for TNPSC GROUP 2 & 2A Mains Exam ; Collector Information!
பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் வாயிலாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது TNPSC 2024-ஆம் ஆண்டு, ஆண்டு திட்ட நிரலில் TNPSC GROUP II & IIA தேர்வு 14 செப்டம்பர் 2024 அன்று நடைபெற்று முடிவடைந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக TNPSC GROUP II & IIA முதன்மைத் தேர்வுக்கு பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் பொருட்டு இப்போட்டித் தேர்விற்காக இலவச பயிற்சி வகுப்புகள் வரும் அக். 7 முதல் நடக்க உள்ளது. இவ்வகுப்புகள் வாரத்தின் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 01.30 மணி வரை நடைபெறும்.
இப்பயிற்சி வகுப்பில் திறனறி பலகை வசதியுடன் கூடிய வகுப்பறைகள், போட்டித்தேர்வர்களுக்கு தேவையான அனைத்து சமச்சீர் மற்றும் பாடப்புத்தகங்களுடன் கூடிய நூலக வசதி, வாராந்திர மாதிரித் தேர்வுகள் நடத்தப்படும், பாடத்திட்டத்தின் படி வகுப்புகள் எடுக்கப்படும்.
எனவே படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.