Perambalur: Free medical camp for kidney & general medicine in Koneripalayam on behalf of Muthaiah Hospital! It will be held the day after tomorrow!
பெரம்பலூர் அருகே கோனேரிபாளையத்தில் சிறுநீரகம் மற்றும் பொதுமருத்துவ இலவச சிகிச்சை முகாம் நாளை நடக்கிறது. இதுகுறித்து ஸ்ரீஅம்மன் பேங்கர்ஸ் குழுமத்தின் தலைவர் ஸ்ரீஅம்மன் முத்தையா கூறியதாவது:
பெரம்பலூர் அருகே கோனேரிபாளையத்தில் கோவில் மண்டபத்தில் தனலட்சுமிசீனிவாசன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் பெரம்பலூரில் உள்ள ஸ்ரீஅம்மன் பேங்கர்ஸ் நிறுவனங்களின் ஒன்றான ஸ்ரீமுத்தையா மருத்துவமனை சார்பில் சிறுநீரகம் மற்றும் பொதுமருத்துவ இலவச சிகிச்சை முகாம் நாளை (புதன்கிழமை) காலை 8.30 மணிக்கு தொடங்கி மதியம் 2மணிவரை நடக்கிறது.
இதில் அறுவைசிகிச்சை தேவைப்படுவோருக்கு லேப்ராஸ்கோபி மூலம் குறைந்த கட்டணத்தில் அறுவைசிகிச்சை செய்துதரப்படஉள்ளது. வயிறு மற்றும் குடல் சம்மந்தமான ஸ்கேன் பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் முற்றிலும் இலவசமாக அளிக்கப்படும் என்றும் அரசு மற்றும் தனியார் இன்சூரன்ஸ் கார்டுகளும் ஏற்றுக்கொள்ளப்படும் இவ்வாறு ஸ்ரீஅம்மன் முத்தையா தெரிவித்தார்.