Perambalur: Free Training on Dairy Cow Husbandry and Vermicomposting!

பெரம்பலூரில் உள்ள இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் கிராம பகுதியை சேர்ந்தவர்களுக்கு கறவை மாடு பராமரித்தல் மற்றும் மண்புழு உரம் தயாரித்தல் பயிற்சி வரும் 18-11-2024 ஆம் தேதி முதல் இலவசமாக அளிக்கப்பட உள்ளது.

இப்பயிற்சி நேரம் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 10 நாட்கள் நடக்கும். மதிய உணவு மற்றும் காலை, மாலை தேநீர் இலவசமாக வழங்கப்படும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்பட்டு, வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும்.

19 வயது முதல் 45 வயதுக்குபட்ட, எழுத படிக்க தெரிந்த, சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராக இருத்தல் வேண்டும் மேலும் வறுமை கோட்டு எண் அல்லது இலக்கு எண் (PIP) அல்லது AAY / PHH – குடும்ப அட்டை எண் அல்லது குடும்பத்தில் எவரேனும் ஏரி வேலை அட்டை உள்ள கிராமப்புற ஆண்கள் மற்றும் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர் எளம்பலூர்  சாலையில்  உள்ள ஐஓபி வங்கியின் மாடியில் உள்ள (IOB) கிராமிய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனர் ஆனந்தியியிடம் தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித் தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கலாம்.

குடும்ப அட்டை, ஆதார் கார்டு, பெற்றோரின் நூறு நாள் வேலை அட்டை, பான்கார்டு, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகல், 3 பாஸ்போர்ட் சைஸ் அளவு போட்டோ, ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து 18-11-2024 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு கீழ்கண்ட பயிற்சி மையத்திற்கு நேரில் வந்து கலந்து கொள்ளவும்.

மேலும், விவரங்களுக்கு ஐஓபி கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம், முதல் தளம் சுப்ரமணியம் காம்ப்ளக்ஸ் எளம்பலூர் சாலை, பெரம்பலூர் என்ற முகவரியிலோ அல்லது 04328-277896 என்ற எண்ணிலோ 84890 65899, 94888 40328 தொலைப்பேசி மூலமாக தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!