Perambalur: Gift for book lovers who maintain a library at a private home: Collector Information!
2024-2025-ஆம் ஆண்டிற்கான பள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் “சொந்த நூலகங்களுக்கு விருது வழங்குதல்” என்ற அறிவிப்பினை செயல்படுத்தும் பொருட்டு, மாவட்ட அளவில் சிறப்பாக பராமரிக்கப்படும் ஒரு நூலகத்தினை தேர்வு செய்து ரூ.3000/– (ரூபாய் மூன்றாயிரம் மட்டும்) மதிப்பில் கேடயம் மற்றும் சான்றிதழ் மாவட்டத்தில் நடத்தப்படும் புத்தக காட்சியில் மாவட்ட ஆட்சித்தலைவரால் வழங்கி கவுரவிக்கப்படும்.
அதனடிப்படையில், பெரம்பலூர் மாவட்டத்தில் தனிநபர் இல்லத்தில் நூலகத்தினை பராமரித்து வரும் புத்தக ஆர்வலர்கள் தங்களது நூலகத்தில் உள்ள நூல்களின் எண்ணிக்கை, அரிய நூல்கள் ஏதாவது இருப்பின் அதன் விவரம், எந்த ஆண்டு முதல் நூலகம் பராமரிக்கப்பட்டு வருகிறது, என்ற விவரம் மற்றும் தங்களது பெயர், முகவரி, கைப்பேசி எண்ணுடன் நவம்பர் 20-ஆம் தேதிக்குள் பெரம்பலூர் மாவட்ட நூலக அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அல்லது dloperambalur@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி மாவட்ட நூலக அலுவலர், மாவட்ட நூலக அலுவலகம், புதிய பேருந்து நிலையம் எதிரில், துறைமங்கலம் அஞ்சல், பெரம்பலூர் மாவட்டம்-621 220, என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தை நேரிலோ அல்லது 7538847847 என்ற தொலைபேசி எண்ணிலோ, மாவட்ட மைய நூலகரை 97863 18555 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது தங்கள் இல்லத்திற்கு அருகில் உள்ள நூலகர்களையோ தொடர்புக் கொண்டு பயன்பெறலாம். என கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.