Perambalur: Girl dies after falling from bed!

பெரம்பலூர் மாவட்டம், கொட்டரை கிராமத்தை சேர்ந்தவர்கள் ரமேஷ் – சந்திரலேகா தம்பதியினர். இவர்களது மகள் யாழினி(4). நேற்றிரவு யாழினி கட்டிலில் உட்கார்ந்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென்று சிறுமிக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதில் நிலை தடுமாறிய சிறுமி கட்டிலில் இருந்து கீழே விழுந்தார். அப்போது தலை மற்றும் கழுத்து பகுதியில் காயம் ஏற்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள், சிறுமியை அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்து விட்டாக தெரிவித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த மருவத்தூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். வலிப்பு நோயால் கட்டிலில் இருந்து தவறி விழுந்த சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.









