Perambalur: Gokula Makkal Party leader Sekar wished Amman Bankers Muthiah on his birthday!
கோகுல மக்கள் கட்சி நிறுவனதலைவர் எம்.வீ.சேகர் நேற்று பெரம்பலூருக்கு வருகை தந்த அவர், வெங்கடேசபுரத்தில் உள்ள அம்மன் பேங்கர்ஸ் குழும அலுவலகத்தில் பெரம்பலூர் மாவட்ட யாதவ மக்களின் ஒருங்கிணைப்பாளரும், ஸ்ரீ அம்மன் பேங்கர்ஸ் குழு மத்தின் நிர்வாக இயக்குனருமான அம்மன் முத்தையாவிற்கு எம்.வீ.சேகர் மற்றும் மாநில நிர்வாகிகள் சால்வை அணிவித்து அவரது 61-வது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்தனர்.
பின்பு யாதவ குலமக்களின் பிரதிநிதிகள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இந்தகூட்டத்தில் மாநிலத் தலைவர்எம்.வீ.சேகர் தலைமையிலான குழுவினர் இன்றைய அரசியல் நிலவரம் தமிழக யாதவர்களின் யதார்த்த நிலை குறித்து விரிவாக கலந்துரையாடல் நடத்தினர்.
இதில்கோகுல மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் கோவிந்தசாமி தகவல் தொழில்நுட்ப அணியின்மாநில செயலாளர் ஜெயபிரகாஷ்,கடலூர் மாவட்ட தலைவர்சக்திவேல், சேலம்மாவட்ட செயலாளர் குணசேகரன், கடலூர் மாவட்டஇளைஞர் அணி தலைவர் துரைசாமி, கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்களம் ஒன்றிய செயலாளர் முனீஷ்
ஆத்தூர் ஒன்றிய செயலாளர் தனசேகரன், தலைவாசல் ஒன்றியசெயலாளர்நடராஜன், பெரம்பலூர் மாவட்ட யாதவர் குழு சார்பில் ஐ.டி. அணி முக்கடல்ராஜ்மோகன்,அன்னமங்கலம் செல்வராஜ், ஜெயராமன், எசனை திருவள்ளுவர் பாஸ்கர்
மற்றும் பலர் கலந்து கொண்டனர்