Perambalur: Government bus-moped collision; Husband and wife killed!
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள பெரியவடகரை கிராமத்தை சேர்ந்தவர்கள் பாலு என்கிற பாலாஜி(38), இவரது மனைவி சித்ரா (32). இவர்கள் இருவரும் இன்று பெரிய வடகரை கிராமத்தில் இருந்து வேப்பந்தட்டைக்கு சொந்த வேலையாக ஒரு மொபட்டில் வந்துள்ளனர். இவர்கள் வந்த வாகனம் வெண்பாவூர் வனப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் வளைவு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, எதிரே பெரம்பலூரில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி சென்ற அரசு பேருந்தும் , மொபட்டும் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பாலாஜி மற்றும் சித்ரா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கை.களத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த கணவன் பாலாஜி, அவர் மனைவி சித்ரா ஆகியோரது உடல்களை கைப்பற்றி, உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அரசு பேருந்து ஓட்டுனரான அரும்பாவூரை சேர்ந்த சின்னத்தம்பி(33) மற்றும் நடத்துனர் சந்திரசேகரன்(42) ஆகிய இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு பேருந்து மோதிய விபத்தில் கணவன் மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரிய வடகரை கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்பட்டுள்ளது.