Perambalur: Grant for construction of modern laundries for BC, MBC, classes ; Collector Grace Pachuau Info!
நவீன முறை சலவையகம் அமைப்பதற்கு தேவையான இயந்திரங்கள், மூலப்பொருட்கள் மற்றும் பிற முன் நிகழ்வுகளுக்கு தேவையான நிதியில் ரூ.3.00 லட்சம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டதிற்கு விண்ணப்பிக்க 10 நபர்கள் கொண்ட ஒரு குழுவாக செயல்பட வேண்டும். இக்குழு உறுப்பினர்களின் ஆண்டு வருமானம் ரூ.1.00 லட்சம் மிகாமல் இருத்தல் வேண்டும்.
மேற்படி திட்டம் மூலம் பயன்பெற விரும்புபவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் கிரேஷ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.