Perambalur: Grant for setting up readymade garment manufacturing unit for BC, MPC classes; Collector Grace Pachuau Info!
தமிழ்நாட்டிலுள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர் மற்றும் சீர்மரபினர் இனத்தை சார்ந்த வகுப்பினர்களின் பொருளாதாரத்தை முன்னேற்றும் விதமாக ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைக்க தமிழக அரசு நிதி உதவியுடன் புதுமையான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைப்பதற்கு தேவையான இயந்திரங்கள், மூலப்பொருட்கள் மற்றும் பிற முன் நிகழ்வுகளுக்கு தேவையான நிதியில் ரூ.3.00 லட்சம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டதிற்கு விண்ணப்பிக்க 10 நபர்கள் கொண்ட ஒரு குழுவாக செயல்பட வேண்டும். இக்குழு உறுப்பினர்களின் ஆண்டு வருமானம் ரூ.1.00 லட்சம் மிகாமல் இருத்தல் வேண்டும்.
மேற்படி இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்புபவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகுமாறு கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.