Perambalur: Group 1, Group 1A exam; Collector inspects in person!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்பட்ட தொகுதி I, IA தேர்வு பெரம்பலூர் மாவட்டத்தில், ரோவர் மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் மற்றும் மகளிர் கலை அறிவியல் கல்லூரி ஆகிய தேர்வு மையங்களில் இன்று நடந்தது. கலெக்டர் கிரேஸ் நேரில் பார்வையிட்டார்.
தேர்வெழுத 2,539 நபர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 1,974 நபர்கள் தேர்வு எழுதினர். 565 நபர்கள் வரவில்லை. தேர்வை கண்காணிக்க பறக்கும், நடமாடும் குழுக்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுத தனி அறைகள் ஒதுக்கப்பட்டு தேர்வெழுத உதவி செய்ய கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். பெரம்பலூர் புதிய மற்றும் பழைய பேருந்து நிலையம் மற்றும் மாவட்டத்தின் இதர பகுதிகளில் இருந்து தேர்வு மையத்திற்குச் செல்ல சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டது.