Perambalur: Guru Pooja for Manikkavasagar written by Thiruvasam!
பெரம்பலூர் அகிலாண்டேஸ்வரி உடனுறை பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் இன்று நாயன்மார்கள் தனி சன்னதியில் எழுந்தருளி அருள் பாலிக்கும் மாணிக்கவாசகர் குருபூஜை விழா இன்று காலை 11 மணியளவில் பால், தயிர்,சந்தனம்,பழ வகைகளுடன் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து பகல் 12:30 மணிக்கு மகாதீபாராதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழா உபயதாரர் ராஜமாணிக்கம் மற்றும் வார வழிபாட்டு குழுவினர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
செயல் அலுவலர் கோவிந்தராஜன், முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன் உள்ளிட்ட சிவனடியார்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர். பூஜைகளை கவுரி சங்க சிவாச்சாரியார் செய்து வைத்தார்.