Perambalur: Heavy rain in various places in the district! It rained yesterday and today!
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்றும், இன்று அதிகாலையும், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் உள்ள வெங்கனூர், உடும்பியம், பெரியம்மாபாளையம், பூலாம்பாடி, விசுவக்குடி, தொண்டைமாந்துறை உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது. விசுவக்குடியில் இடி – மின்னல் தாக்கியதில் கதிவரன் என்பவரது மாடு பலியானது.
இன்று பெரம்பலூர் நகருக்குள் சில இடங்களில் சங்கு, காமராஜர் வளைவு, ஆத்தூர் சாலை பகுதிகளில் மழை பெய்தது. பிற இடங்களில் மழை பெய்யவில்லை. மேலும், வேப்பந்தட்டை, எசனை சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் இன்று மழை பெய்தது.
இன்று காலை 6.30 மணி வரை பெரம்பலூர் மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் (மி.மீ): பெரம்பலூர் 0, எறையூர் 2, கிருஷ்ணாபுரம் 0, வ.களத்தூர் 7, தழுதாழை 21, வேப்பந்தட்டை 3, அகரம்சீகூர் 0, லப்பைக்குடிக்காடு 0, புதுவேட்டக்குடி 19, பாடாலூர் 10, செட்டிக்குளம் 0, என மொத்தம் 62 மி.மீ மழை பதிவானது. மாவட்டத்தின் சராசரி மழையளவு 5.64 ஆகும்.