Perambalur: Heavy rain with thunder and lightning; Sacrifice of cow! Damage to computers!! Road blocked due to flood!!

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று மாலை சுமார் 4.30 மணி அளவில் தொடங்கி சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை, இடி மின்னலுடன் பெய்தது. இதில் வீதிகளில் வெள்ளம் பெருக்கோடியது.

பெரம்பலூர்பாலக்கரை அருகே உள்ள ஆப்புரான் கோயில் மேற்கு பகுதியில் சாலைவந்த வெள்ளம், பள்ளத்தில் இருந்த கடைகளில் புகுந்ததால் உரம் உள்ளிட்ட பொருட்கள் நனைந்து சேதமடைந்தன. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியினர் ஒன்று திரண்டு நகராட்சிக்கு கண்டித்து சாலை மறியலில ஈடுபட்டனர். மறியலின் போது, நகராட்சி நிர்வாகத்திற்கு பல முறை முன்கூட்டியே மழை வெள்ளம் தங்களை பாதிக்கும் உடனடியாக வடிகால் வசதி செய்வதோடு, மழை நீர் செல்லும் கால்வாய்களை தனியார் ஆக்கிமிரப்பு செய்துள்ளதை அகற்ற வேண்டும் என போராடினர்.

இது குறித்து தகவல் அறிந்த, போலீஸ், வருவாய், மற்றும் நகராட்சி அலுவலர்கள் அவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி, உடனடியாக பொக்லைன் எந்திரத்தை வரவழைத்து, மழைநீர் வடிய நடவடிக்கை எடுத்தனர். இந்த மறியலால், சுமார் முக்கால் மணிநேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

மேலும், மின்சாரம் முன்னெச்சரிக்கை நடடிவக்கையாக பல மணி நேரம் நிறுத்தப்பட்டும், மழை மற்றும் பலத்த காற்றால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்ற மின்வாரிய ஊழியர்கள் சரி செய்து மின்வினியோகத்தை சீரடைய செய்தனர்.

அரும்பாவூர் கண்ணன் என்பவரது வயலில் மேய்ந்து கொண்டிருந்த அப்துல்வாஹாப் என்பவருடைய மனைவிக்கு சொந்தமான சுமார் 50 ஆயிரம் மதிப்புள்ள பசு மாடு இடிதாக்கியதில் பலியானது. இது குறித்து அரும்பாவூர் போலீசார், மற்றும், வருவாய் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!