Perambalur: High-Mass electric lamps worth Rs. 40 lakhs in the municipality; Minister Sivashankar inaugurated!

தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பெரம்பலூர் நகராட்சியில் உள்ள துறையூர் சாலை (தனலட்சுமி சீனிவாசன் கலை அறிவியல் கல்லூரி) பகுதியில் இருந்து அரணாரை வரை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ. 40 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள உயர் மின் கோபுர விளக்குகளை திறந்து வைத்தார். பெரம்பலூர் சட்ட மன்ற உறுப்பினர் ம. பிரபாகரன், நகராட்சித் தலைவர் அம்பிகா ராஜேந்திரன், அட்மா சேர்மன் வீ.ஜெகதீசன், நகராட்சித்த துணைத் தலைவர் ஆதவன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் டி.சி.பாஸ்கர், முன்னாள் எம்.எல்.ஏக்கள் துரைசாமி, ராஜ்குமார், நகராட்சி பொறியாளர் ரவி, கவுன்சிலர்கள், ஒப்பந்தாரர் தமிழ்ச்செல்வன், திருச்சி சர்வதேச விமான நிலைய ஆலோசனைக் குழு உறுப்பினருமான டி.ஆர். சிவசங்கர் உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டனர்.











kaalaimalar2@gmail.com |
9003770497