Perambalur: Honorary Lecturers Petitioning the Corpse; Stay for 15 days; Protest against non-payment of salary for 8 months!

பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் அரசு கல்லூரியில் கடந்த 8 மாதங்கள் பணி செய்ததற்கான ஊதியத்தை வழங்க கோரி கடந்த 15 நாட்களாக, அங்கு பணிபுரிந்து வரும் கவுரவ விரிவுரையாளர்கள் தொடர்ந்து கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அவர்களது போராட்டத்திற்கு தற்போது வரை எவ்வித தீர்வும் எட்டப்படாத நிலை உள்ளது. இதனால், வேதனை அடைந்த அவர்கள், பிற பல்கலைக்கழங்களில், கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்கிய நிலையில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் மட்டும் வழங்காமல் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால், வேதனை அடைந்த அவர்கள், இன்று பிணத்திடம் மனு கொடுக்கும் போராட்டத்தை நடத்தினர். இதனால், சற்று நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளச்சாரயம் குடித்து பலியானர்களுக்கு 10 லட்ச ரூபாய் நிவராணத் தொகை வழங்கும் அரசு, ஊழியம் செய்ததற்கான ஊதியத்தை கேட்டு, கவுரவ விரிவுரையாளர்கள் கவுரமாக நடத்தும் போராட்டத்தை மதித்து, தமிழ்நாடு அரசு அவர்கள் வாழ்வாதராம் மற்றும் அவர்களின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஊதியத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

கவுரவ விரிவுரையாளர்களை கவுரவுமாக நடத்த அரசும், பல்கலைக்கழகமும் முன்வரவேண்டும், இதனால் பாதிக்கப்படுவது, ஏழை எளிய மாணவர்களின் படிப்பே என்பதை உணரவேண்டும்!

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!